அதிகம் சம்பாதிக்கும் கால்பந்து வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த ரொனால்டோ


அதிகம் சம்பாதிக்கும் கால்பந்து வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த ரொனால்டோ
x
தினத்தந்தி 22 Sep 2021 7:34 PM GMT (Updated: 22 Sep 2021 7:34 PM GMT)

2021-22 ஆம் ஆண்டு சீசனில் ரொனால்டோவின் வருமானம் ரூ.922 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்,

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இத்தாலியின் யுவென்டஸ் கிளப்பில் இருந்து சமீபத்தில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்புக்கு மாறினார். இதனால் அவரது வருவாய் மேலும் அதிகரித்துள்ளது. 2021-22 ஆம் ஆண்டு சீசனில் அவரது ஊதியம், போனஸ், விளம்பரம் மூலம் கிடைக்கும் மொத்த தொகை ரூ.922 கோடியாக இருக்கும் என்று மதிப்பிட்டு பிரபல வணிக இதழான அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. 

இதனால் அதிகம் சம்பாதிக்கும் கால்பந்து வீரர்களில் அர்ஜென்டினாவின் மெஸ்சியை அவர் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்கிறார். பிரான்சின் பி.எஸ்.ஜி. கிளப்புக்காக ஆடும் மெஸ்சியின் இந்த சீசன் வருவாய் ரூ.812 கோடியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story