பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: ஐக்கிய அரபு அமீரகம் - பஹ்ரைன் நாடுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம்


பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: ஐக்கிய அரபு அமீரகம் - பஹ்ரைன் நாடுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 24 Sep 2021 10:40 AM GMT (Updated: 24 Sep 2021 10:40 AM GMT)

கடந்த ஒரு மாதமாக இந்திய பெண்கள் அணி ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரில் பயிற்சி முகாமில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

டெல்லி

பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகள் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது . இதற்கு தயாராகும் விதமாக இந்திய பெண்கள் கால்பந்து அணி  ஐக்கிய அரபு அமீரகம்  மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

கடந்த ஒரு மாதமாக இந்திய பெண்கள் அணி ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரில்  முகாம் அமைத்து  பயிற்சி மேற்கொண்டு வருகிறது . இதன் தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து  பஹ்ரைன் , சீன தைபே ,துனிசியா ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது.

இது குறித்து இந்திய பெண்கள் கால்பந்து பயிற்சியாளர் தாமஸ் கூறியதாவது:
 
 ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனில் நடக்கும் போட்டிகள்  எதிரிகளுக்கு எதிராக நாம் எங்கு நிற்கிறோம் என்று நம்மை நாமே தீர்மானிக்க உதவியாக இருக்கும் . இந்திய அணி தங்கள் கட்டமைக்கும் செயல்முறையை கட்டியெழுப்ப வேண்டும். இவை அனைத்தும் ஒரு சர்வதேச போட்டியில் தான் மேம்படும்  இவ்வாறு  அவர்  கூறினார்.


Next Story