கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு பரிசுத்தொகை உயர்வு + "||" + ISL increases prize money for league winners by Rs 3.5 crore, slashes amount for champions

ஐ.எஸ்.எல். கால்பந்து: புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு பரிசுத்தொகை உயர்வு

ஐ.எஸ்.எல். கால்பந்து: புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு பரிசுத்தொகை உயர்வு
8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 19-ந்தேதி கோவாவில் தொடங்குகிறது. மார்ச் மாதம் வரை நடக்கும் இந்த போட்டியில் 11 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த போட்டிக்கான பரிசுத்தொகை விவரத்தை கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு நேற்று தெரிவித்தது. போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.15½ கோடியாகும். இதில் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணிக்கு கடந்த 2 ஆண்டுகளாக தனியாக கோப்பையுடன் ரூ.50 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகை ரூ.3½ கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. 

அதே சமயம் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்குரிய பரிசுத்தொகை ரூ.8 கோடியில் இருந்து ரூ.6 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதே போல் இறுதிப்போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு ரூ.3 கோடி (முன்பு இது ரூ.4 கோடி) வழங்கப்படும். அரைஇறுதியில் தோற்கும் அணிகள் தலா ரூ.1½ கோடி வீதம் பெறும். புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி இறுதி சுற்றில் மகுடம் சூடினால் மொத்தம் ரூ.9½ கோடியை பரிசாக அள்ளலாம். அத்துடன் புள்ளி பட்டியலில் ‘நம்பர் ஒன்’ அணிக்கு உயரிய கவுரவமாக, ஆசிய கிளப் சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.