கால்பந்து

தெற்காசிய கால்பந்து போட்டி: வாழ்வா? சாவா? ஆட்டத்தில் நேபாள அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி + "||" + SAFF Championship: India gears up for do-or-die clash against Nepal

தெற்காசிய கால்பந்து போட்டி: வாழ்வா? சாவா? ஆட்டத்தில் நேபாள அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி

தெற்காசிய கால்பந்து போட்டி: வாழ்வா? சாவா? ஆட்டத்தில் நேபாள அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி
இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது .
மாலத்தீவு 

13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியன் இந்தியா, நடப்பு சாம்பியன் மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம், இலங்கை ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன. 

தற்போதைய புள்ளி பட்டியல்  நிலவரப்படி நேபாள அணி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இரண்டு ஆட்டங்களில் விளையாடி உள்ள நேபாள அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய அணி  விளையாடிய இரண்டு போட்டிகளும் டிராவில் முடிந்துள்ளன.

இந்த நிலையில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில்  இருக்கும் நேபாள அணியை இன்று எதிர்கொள்கிறது இந்திய அணி . இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது .

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இன்னும் இரண்டு  போட்டிகளே எஞ்சியுள்ளதால் இந்திய அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா சாவா ஆட்டமாகும். வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் இந்திய அணியும் , தொடரில் வெற்றியை தக்க வைக்கும் முனைப்பில் நேபாள அணியும் களமிறங்குவதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

தொடர்புடைய செய்திகள்

1. 20-ஓவர் உலக கோப்பை: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
கிரிக்கெட் உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 20 ஓவர் போட்டி நாளை நடைபெறுகிறது.
2. இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 666 பேர் பலி: 16,326 பேருக்கு தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,326 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியா-இங்கிலாந்து கடைசி டெஸ்ட் போட்டியை எட்ஜ்பஸ்டனில் நடத்த முடிவு
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் டெஸ்டை வேறொரு நாளில் நடத்துவது என்று இரண்டு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புக் கொண்டன.
4. 100 கோடி தடுப்பூசி செலுத்திய இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு- பிரதமர் மோடி நன்றி
இந்தியா 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி நேற்று வரலாற்று சாதனை படைத்தது.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,786- பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,786- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.