கால்பந்து

கத்தாரில் நடக்கும் உலக கோப்பையே தனது கடைசி போட்டி: கால்பந்து வீரர் நெய்மார் தகவல்! + "||" + Neymar believes 2022 World Cup in Qatar will be his last for Brazil

கத்தாரில் நடக்கும் உலக கோப்பையே தனது கடைசி போட்டி: கால்பந்து வீரர் நெய்மார் தகவல்!

கத்தாரில் நடக்கும் உலக கோப்பையே தனது கடைசி போட்டி: கால்பந்து வீரர் நெய்மார் தகவல்!
கத்தாரில் அடுத்த ஆண்டு நடக்கும் உலக கோப்பையே தனது கடைசி போட்டியாக இருக்கலாம் என பிரபல கால்பந்து வீரர் நெய்மார் தெரிவித்துள்ளார்.

சா பாலோ,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபலமான கால்பந்தாட்ட வீரர் நெய்மர். இவருக்கு உலகெங்கிலும் கால்பந்தாட்ட ரசிகர்கள் பலர் உள்ளனர்.  29 வயதான இவர் கால்பந்தில் மிகப்பெரும் நட்சத்திர வீரராக வலம் வருகிறார். அடுத்த ஆண்டு நவம்பரில் கத்தாரில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியானது தனது கடைசி உலக கோப்பை போட்டியாக இருக்கலாம் என்று நெய்மார் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கத்தாரில் நடக்கும் உலகக்கோப்பை போட்டியை எனது கடைசி உலக கோப்பை போட்டியாகக் கருதி எதிர்கொள்வேன். ஏனெனில் அதன் பிறகு அடுத்த  உலகக்கோப்பை போட்டிக்கு நான் மனதளவில் தயாராக இருப்பேனா என்பது எனக்கு தெரியாது. எனவே அடுத்த ஆண்டு கத்தாரில் நடக்கும் உலக கோப்பையை வெல்வதற்கு என்னால் முடிந்த எல்லா முயற்சியையும் தனது அணிக்கு அளிப்பேன்’ என்று நெய்மார் குறிப்பிட்டார்.

Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. லெய்ப்ஸிக் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து நட்சத்திர வீரர் நெய்மர் விலகல்
யூ.ஈ.எப்.ஏ சாம்பியன்ஷிப் லீக்கில் லெய்ப்ஸிக் அணிக்கு எதிரான இன்று நடைபெற உள்ள போட்டியில் இருந்து நட்சத்திர வீரர் நெய்மர் விலகியுள்ளார்.
2. தெற்காசிய கால்பந்து இறுதிப்போட்டி: இந்தியா-நேபாளம் இன்று மோதல்
தெற்காசிய கால்பந்து போட்டியில் 8-வது பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி இன்று நேபாளத்தை சந்திக்கிறது.
3. உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பிரேசில், அர்ஜென்டினா அணிகள் வெற்றி
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பிரேசில், அர்ஜென்டினா அணிகள் வெற்றி.
4. தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்குள் நுழையுமா இந்திய அணி ?
முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.
5. சர்வதேச கால்பந்து கோல்கள் : பீலேவின் சாதனையை சமன் செய்தார் சுனில் சேத்திரி
இந்த போட்டியில் சுனில் சேத்திரி அடித்த கோல் அவரது 77 வது சர்வதேச கோலாகும். இதன் மூலம் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சர்வதேச கோல் எண்ணிகையை சுனில் சேத்திரி சமன் செய்துள்ளார்