கால்பந்து

பஹ்ரைனில் கால்பந்து போட்டி; இந்திய மகளிர் அணி அதிரடி வெற்றி + "||" + Football match in Bahrain; Indian women's team wins action

பஹ்ரைனில் கால்பந்து போட்டி; இந்திய மகளிர் அணி அதிரடி வெற்றி

பஹ்ரைனில் கால்பந்து போட்டி; இந்திய மகளிர் அணி அதிரடி வெற்றி
பஹ்ரைனில் நடந்த கால்பந்து போட்டியில் இந்திய மகளிர் அணி அதிரடியாக விளையாடி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
ஹமது,

பஹ்ரைனின் ஹமது நகரில் மகளிர் கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில், இந்திய மற்றும் பஹ்ரைன் அணிகள் விளையாடின.  இந்த போட்டியில், முதல் கோலை இந்திய அணி 13வது நிமிடத்தில் (சங்கீதா பஸ்போர்) அடித்தது.  தொடர்ந்து, 19, 68, 34 மற்றும் 69 ஆகிய நிமிடங்களில் கோல்கள் அடிக்கப்பட்டன.

இதனால் இந்திய மகளிர் அணி 5-0 என்ற கோல் கணக்கில் பஹ்ரைனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.  இதனை தொடர்ந்து நாளை மறுநாள் நடைபெறவுள்ள நட்பு ஆட்டத்தில் சைனீஸ் தைபே அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல்: பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வெற்றி
9 மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. 9 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும் அந்த கட்சி கைப்பற்றியது.
2. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க.வினருக்கு மோடி தமிழில் வாழ்த்து
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக பா.ஜ.க.வினருக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம் என்று தெரிவித்துள்ளார்.
3. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்; இந்தியாவின் கிதம்பி முதல் சுற்றில் வெற்றி
டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் கிதம்பி சக வீரரான பிரணீத்துடன் விளையாடி முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
4. அமெரிக்காவில் கால்பந்து போட்டியில் துப்பாக்கி சூடு; 4 பேர் காயம்
அமெரிக்காவில் கால்பந்து போட்டியின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் காயமடைந்து உள்ளனர்.
5. இது மு.க.ஸ்டாலினின் இமாலய வெற்றி!
கிராமங்கள்தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கான முதுகெலும்பு என்று காந்தியடிகள் நம்பினார்.