கால்பந்து

லெய்ப்ஸிக் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து நட்சத்திர வீரர் நெய்மர் விலகல் + "||" + Neymar ruled out of PSG Champions League clash against Leipzig

லெய்ப்ஸிக் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து நட்சத்திர வீரர் நெய்மர் விலகல்

லெய்ப்ஸிக் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து நட்சத்திர வீரர் நெய்மர் விலகல்
யூ.ஈ.எப்.ஏ சாம்பியன்ஷிப் லீக்கில் லெய்ப்ஸிக் அணிக்கு எதிரான இன்று நடைபெற உள்ள போட்டியில் இருந்து நட்சத்திர வீரர் நெய்மர் விலகியுள்ளார்.
பாரிஸ்,

நெய்மர் தற்போது நடைபெற்று வரும் யூ.ஈ.எப்.ஏ  சாம்பியன்ஷிப் லீக் தொடரில், பாரிஸ்-செயின்ட் ஜெர்மெய்ன் (பி எஸ் ஜி) அணிக்காக விளையாடி வருகிறார். இன்று  நடைபெறவுள்ள லெய்ப்ஸிக் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து  இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நெய்மர் விலகியுள்ளார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த உலகின் முன்னணி கால்பந்து வீரரான நெய்மர், கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்ற உருகுவே அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் சிறப்பாக விளையாடி பிரேசில் அணியை வெற்றி பெறச் செய்தார்.அதன்பின், கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற போட்டியில் அவர் விளையாடவில்லை. 

இந்நிலையில் அடுத்த வாரம் மார்செய்ல் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் அவர் குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனினும், அவர் காயத்தை பொருட்படுத்தாமல் நேற்று  கால்பந்து பயிற்சி மேற்கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கால்பந்து போட்டியின் உயரிய விருது : 7வது முறையாக வென்றார் லியோனல் மெஸ்ஸி
முதல் முறையாக 2009 ஆம் ஆண்டு பாலன் டி ஓர் விருதை வென்ற லியோனல் மெஸ்ஸி தொடர்ச்சியாக 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளிலும் இந்த விருதை வென்றார்.
2. ஐ.எஸ்.எல் கால்பந்து: கவுகாத்தி -கேரளா அணிகள் இன்று மோதல்
ஐ. எஸ் .எல் கால்பந்து போட்டியில் இன்று நார்த் ஈஸ்ட் யுனைடெட்(கவுகாத்தி) -கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை வெற்றி
தனது முதல் போட்டியில் சென்னை அணி ஐதராபாத்தை வீழ்த்தியது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவை வீழ்த்தி மும்பை வெற்றி
நேற்று நடந்த போட்டியில் மும்பை அணி கோவாவை வீழ்த்தியது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி இன்று ஐதராபாத்துடன் மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று ஐதராபாத்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.