கால்பந்து

லீக் கோப்பை கால்பந்து; அர்செணல், செல்ஸியா, சண்டெர்லேண்ட் அணிகள் காலிறுதிக்கு தகுதி + "||" + Arsenal, Chelsea and Sunderland reach League Cup quarterfina

லீக் கோப்பை கால்பந்து; அர்செணல், செல்ஸியா, சண்டெர்லேண்ட் அணிகள் காலிறுதிக்கு தகுதி

லீக் கோப்பை கால்பந்து; அர்செணல், செல்ஸியா, சண்டெர்லேண்ட் அணிகள் காலிறுதிக்கு தகுதி
கேரபாவோ கோப்பை கால்பந்து தொடரில் அர்செணல், செல்ஸியா மற்றும் சண்டெர்லேண்ட் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
லண்டன்,

இங்கிலிஷ் கால்பந்து தொடரில் (இ.எஃப்.எல்)  அர்செணல், செல்ஸியா, சண்டெர்லேண்ட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

இங்கிலாந்தின் உள்ளூர் கால்பந்து தொடரான ‘கேரபாவோ கோப்பை’ கால்பந்து தொடரில், புதன்கிழமையன்று நடைபெற்ற போட்டிகளில் அர்செணல்-லீட்ஸ் யுனைடெட்,  செல்ஸியா-சவுத்தாம்ப்டன் மற்றும் சண்டெர்லேண்ட்-குயின் பார்க் ரேஞ்சர்ஸ் அணிகள் மோதின.


இதில்  லீட்ஸ் யுனைடெட் அணியை 2-0 எனும் கோல் கணக்கில் அர்செணல் அணி வீழ்த்தியது. சவுத்தாம்ப்டன் அணியை பெனால்டி முறையில் 4-3 எனும் கோல் கணக்கில் செல்ஸியா அணி  வீழ்த்தியது. மற்றொரு போட்டியில்,  குயின் பார்க் ரேஞ்சர்ஸ் அணியை பெனால்டி முறையில் 3-1 எனும் கோல் கணக்கில் சண்டெர்லேண்ட் அணி வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம், அந்த அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.  

இன்று நள்ளிரவு நடைபெறும் முக்கியமான போட்டிகளில் மான்செஸ்டர் சிட்டி-வெஸ்ட் ஹாம் யுனைடெட்,   டோட்டென்ஹாம்-பர்ன்லி மற்றும்  லிவர்பூல்-ப்ரெஸ்டன்  ஆகிய அணிகள் மோத உள்ளன.