பிரேசில் சுற்றுப்பயணம் : 23 பேர் கொண்ட இந்திய பெண்கள் கால்பந்து அணி அறிவிப்பு


பிரேசில்  சுற்றுப்பயணம் : 23 பேர் கொண்ட இந்திய பெண்கள் கால்பந்து அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2021 2:09 PM GMT (Updated: 18 Nov 2021 2:09 PM GMT)

பிரேசிலில் உள்ள மனாஸ் நகரில் நவம்பர் 25ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணி பிரேசில் அணியை எதிர்கொள்கிறது

மனாஸ் , பிரேசில்

பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகள் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது . இதற்கு தயாராகும் விதமாக இந்திய  பெண்கள் கால்பந்து அணி  பிரேசில் நாட்டுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

பிரேசிலில் உள்ள மனாஸ் நகரில் நவம்பர் 25ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணி பிரேசில் அணியை எதிர்கொள்கிறது.அதை தொடர்ந்து இந்திய பெண்கள் அணி நவம்பர் 28ம் தேதி சிலி  அணியுடனும் மற்றும் டிசம்பர் 1ம் தேதி வெனிசுலா  கால்பந்து அணியுடனும் மோதுகிறது.

அதே வேளையில் பிரேசில் அணி நவம்பர் 28 ஆம் தேதி வெனிசுலா அணியை எதிர்கொள்கிறது. பின்னர்  டிசம்பர் 1ம் தேதி   சிலியுடன் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. அதே போல் சிலி மற்றும் வெனிசுலா அணிகள்  நவம்பர் 25 தேதி நேருக்கு  நேர் மோதுகின்றன.

இந்த நிலையில் பிரேசில் தொடருக்கான  23 பேர் கொண்ட  இந்திய பெண்கள் அணி  இன்று அறிவிக்கப்பட்டுள்ளது .

கோல்கீப்பர்கள்: அதிதி சவுகான், எம் லிந்தோய்ங்காம்பி தேவி, சௌமியா நாராயணசாமி. 

தடுப்பாட்ட வீராங்கனைகள்: தலிமா சிப்பர், ஸ்வீட்டி தேவி, ரிது ராணி, ஆஷாலதா தேவி, மனிசா பன்னா, ஷில்கி தேவி, ரஞ்சனா சானு, . 

நடுகள வீராங்கனைகள் : இந்துமதி கதிரேசன், சஞ்சு, அஞ்சு தமாங், மார்டினா தோக்சோம், கார்த்திகா அங்கமுத்து, கமலா தேவி. 

முன்கள வீராங்கனைகள்: மனிஷா கல்யாண், பியாரி சாக்சா, ரேணு, டாங்மேய் கிரேஸ், சௌமியா குகுலோத், மாரியம்மாள் பாலமுருகன்.

ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் விதமாக கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 3 போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story