பிரபல கால்பந்து வர்ணனையாளர் நோவி கபாடியா காலமானார்


பிரபல கால்பந்து வர்ணனையாளர் நோவி கபாடியா காலமானார்
x
தினத்தந்தி 18 Nov 2021 3:54 PM GMT (Updated: 18 Nov 2021 3:54 PM GMT)

கடந்த இரண்டு ஆண்டுகளாக அரிய நியூரான் நோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் இருந்தார் நோவி கபாடியா

டெல்லி 

இந்தியாவின் தலைசிறந்த கால்பந்து விளையாட்டுப்  வர்ணனையாளர்களில் ஒருவரான நோவி கபாடியா தனது 68வது வயதில் காலமானார். 

கால்பந்து வர்ணனையாளர் , பத்திரிகையாளர், விமர்சகர் என பன்முகம் கொண்ட இவர் உலக அளவில் தனது கால்பந்து வர்ணனைக்கு பெயர் பெற்றவர்.  இவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் எஸ்ஜிடிபி  கஸ்லா கல்லூரியில் பேராசிரியராகவும், 2003 முதல் 2010 வரை பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவராகவும்  இருந்துள்ளார்.

இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக  அரிய  நியூரான் நோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில்  இருந்தார். கடந்த ஒரு மாதமாக வெண்டிலேட்டர் உதவியுடன்  சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று மதியம் காலமானார்.இவர் மறைவுக்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Next Story