கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவை வீழ்த்தி மும்பை வெற்றி + "||" + Igor Angulo’s Brace Powers Mumbai City FC to 3-0 Win Versus FC Goa

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவை வீழ்த்தி மும்பை வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவை வீழ்த்தி மும்பை வெற்றி
நேற்று நடந்த போட்டியில் மும்பை அணி கோவாவை வீழ்த்தியது.
கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை  அணியும், உள்ளூர் அணியான கோவாவும் மோதின.

இந்த போட்டியின் முதல் பாதியில் மும்பை சிட்டி அணி வீரர் இகோர் அங்குலோ 33 மற்றும் 36-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல்பாதி முடிவில் மும்பை அணி 2-0 என்ற கனக்கில் முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் கோவா வீரர்கள் கோல் போட முயன்றும் அந்த அணியால் முடியாமல் போனது. 76-வது நிமிடத்தில் மும்பை வீரர் கோர் கடாட் மற்றொரு கோல் அடிக்க, இறுதியில் 3-0  என்ற கணக்கில் கோவாவை மும்பை வீழ்த்தியது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி இன்று ஐதராபாத்துடன் மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று ஐதராபாத்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
2. பிரேசில் சுற்றுப்பயணம் : 23 பேர் கொண்ட இந்திய பெண்கள் கால்பந்து அணி அறிவிப்பு
பிரேசிலில் உள்ள மனாஸ் நகரில் நவம்பர் 25ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணி பிரேசில் அணியை எதிர்கொள்கிறது
3. உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று : அர்ஜென்டினா அணி தகுதி
அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு அர்ஜென்டினா அணி தகுதி பெற்றது.
4. உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று : சான் மரினோ அணியை வீழ்த்தி இங்கிலாந்து தகுதி
சான் மரினோ அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது.
5. கால்பந்து போட்டியில் தோல்வி - கண்ணீர் வடித்த ரொனால்டோ!
செர்பியாவுக்கு எதிரான கால்பந்து தகுதிச்சுற்று போட்டியில், போர்ச்சுகல் அணி தோல்வி அடைந்தது.