கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை வெற்றி + "||" + Chennai beat Hyderabad in their first match.

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை வெற்றி
தனது முதல் போட்டியில் சென்னை அணி ஐதராபாத்தை வீழ்த்தியது.
கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை அணியும், ஐதராபாத் அணியும் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இரண்டாம் பாதியின் 66-வது நிமிடத்தில் சென்னை அணி வீரரான விளாடிமிர் கோமர் கோல் அடிக்க, சென்னை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 

பதிலுக்கு கோல் அடிக்க ஐதராபாத் அணி பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும், கடைசிவரை அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் சென்னை அணி 1-0 என்ற கணக்கில் ஐதராபாத்தை வீழ்த்தியது. தனது முதல் போட்டியிலேயே வென்ற சென்னை அணி புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவை வீழ்த்தி மும்பை வெற்றி
நேற்று நடந்த போட்டியில் மும்பை அணி கோவாவை வீழ்த்தியது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி இன்று ஐதராபாத்துடன் மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று ஐதராபாத்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
3. கனமழை: சென்னையில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
சென்னையில் இன்று காலை விட்டு விட்டு பெய்த மழையால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
4. தொடர் மழை: சென்னையில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது - மாநகராட்சி ஆணையர்
சென்னை மாநகராட்சி சார்பில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது என்று ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
5. பிரேசில் சுற்றுப்பயணம் : 23 பேர் கொண்ட இந்திய பெண்கள் கால்பந்து அணி அறிவிப்பு
பிரேசிலில் உள்ள மனாஸ் நகரில் நவம்பர் 25ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணி பிரேசில் அணியை எதிர்கொள்கிறது