கால்பந்து

சாம்பியன் லீக் கால்பந்து: லிவர்பூல் அணி அபாரம்! + "||" + Champion League, Liverpool upsets Porto in group- B match

சாம்பியன் லீக் கால்பந்து: லிவர்பூல் அணி அபாரம்!

சாம்பியன் லீக் கால்பந்து: லிவர்பூல் அணி அபாரம்!
சாம்பியன் லீக் கால்பந்து தொடரின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல்-போர்ட்டோ அணிகள் மோதின.
லிவர்பூல்,

சாம்பியன் லீக் கால்பந்து தொடரின் குரூப்-பி பிரிவின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் - போர்ட்டோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதல் பாதியில்  பல வாய்ப்புகள் கிடைத்தும் அவை அனைத்தையும் போர்ட்டோ அணி வீரர்கள் கோல்களாக மாற்றத் தவறினர்.

மறுமுனையில், லிவர்பூல் அணியின் தியாகோ அல்காண்டரா சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் தனது முதல் கோல் அடித்து அசத்தினார். மற்றொரு வீரர், முகமது சலா இன்னொரு கோல் அடிக்க லிவர்பூல் அணி 2-0 எனும் கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

கடைசி வரை போராடிய  போர்ட்டோ அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

போர்ட்டோ அணி லிவர்பூல் அணிக்கு எதிராக 10 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் தோல்வியும் 3 போட்டிகளை டிரா செய்தும் உள்ளது. இதுவரை அந்த அணியால் லிவர்பூல் அணியை வெற்றி பெற முடியாத சோகக்கதை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. சாம்பியன் லீக் கால்பந்து : மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வில்லாரியல் - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின.
2. ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டி இன்று தொடக்கம்
11 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டி கோவாவில் இன்று தொடங்குகிறது.
3. பிரபல கால்பந்து வர்ணனையாளர் நோவி கபாடியா காலமானார்
கடந்த இரண்டு ஆண்டுகளாக அரிய நியூரான் நோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் இருந்தார் நோவி கபாடியா
4. நான் பெண் தான், என்னை ஆண் என கூறியவர்கள் மீது வழக்கு தொடருவேன்- ஈரான் வீராங்கனை
சமீபத்தில் ஈரான் பெனால்டி ஷூட் அவுட்டில் ஜோர்டானை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல்முறையாக மகளிர் ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது
5. அர்ஜெண்டினாவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் நெய்மர் விலகல்
தொடை வலி பிரச்சினை காரணமாக அர்ஜெண்டினாவுக்கு எதிரான தகுதிச் சுற்றில் இருந்து நெய்மர் விலகியுள்ளார்.