ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி-கேரளா போட்டி 'டிரா'


ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி-கேரளா போட்டி டிரா
x
தினத்தந்தி 25 Nov 2021 4:27 PM GMT (Updated: 25 Nov 2021 4:27 PM GMT)

இன்று நடைபெற்ற 7 வது லீக் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) -கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

கோவா,

8 வது ஐ . எஸ் .எல் கால்பந்து போட்டி  கடந்த  (வெள்ளிக்கிழமை)  தொடங்கியது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில் இன்று  நடைபெற்ற 7 வது லீக் போட்டியில்  நார்த்  ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி ) -கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள்  மோதின.

 இந்த ஆட்டத்தில்  இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.  இதனால் இந்த ஆட்டம்  0-0 என்று சமனில் முடிந்தது .


Next Story