கால்பந்து

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது ஒடிசா + "||" + Indian Super League football: Odisha beat East Bengal

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது ஒடிசா

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது ஒடிசா
மொத்தம் 10 கோல்கள் அடிக்கப்பட்ட இந்த போட்டியில் ஒடிசா அணி வெற்றி பெற்றது.
கோவா ,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில்  ஒடிசா - ஈஸ்ட் பெங்கால்  அணிகள்  மோதின. இந்த போட்டியின் 13 வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியின் டேரன் முதல் கோல் அடித்தார்.இதற்கு பதிலடியாக  ரோடாஸ் 33 வது நிமிடத்தில் ஒடிசா அணியின் முதல் கோலை அடித்தார்.

போட்டியின் 40 வது நிமிடத்தில் ரோடாஸ் தனது இரண்டாவது கோலை அடிக்க ஒடிசா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த ஆட்டம் முழுவதும் கோல் மழையாக இருந்தது.

ஆட்டத்தின் 71 மற்றும் 93 வது நிமிடத்தில் ஒடிசா அணியின் கேப்ரேரா தனது பங்கிற்கு இரண்டு கோல்கள் அடிக்க , ஈஸ்ட் பெங்கால் அணியின் டேனியல் சீமாவும் இறுதி கட்டத்தில் இரண்டு கோல்கள் அடித்தார்.

இறுதியில் ஒடிசா அணி மொத்தம் 6 கோல்கள் அடிக்க ஈஸ்ட் பெங்கால் அணியால் 4  கோல்கள் மட்டுமே அடிக்க முடிந்தது . மொத்தம் 10 கோல்கள்  அடிக்கப்பட்ட இந்த போட்டியில் ஒடிசா அணி வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா அணியிடம் மும்பை தோல்வி
ஒடிசா அணி 4-2 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டிக்கு அதிர்ச்சி அளித்தது.
2. 4 கிமீ தூரம் தாயின் உடலை சுமந்து சென்று இறுதிச் சடங்கு செய்த மகள்கள்..!
தாயின் இறுதி சடங்கை மகன்கள் புறக்கணித்த நிலையில் 4 கிமீ தூரம் தாயின் உடலை சுமந்து சென்று 4 மகள்கள் இறுதிச் சடங்கு செய்துள்ளனர்.
3. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: ஐதராபாத் - ஒடிசா அணிகள் இன்று மோதல்
இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஐதராபாத் - ஒடிசா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
4. ஒமைக்ரான் பரவல் எதிரொலி: ஒடிசாவில் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் விழாவிற்கு கடும் கட்டுப்பாடு
ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக ஒடிசாவில் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் விழாவிற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
5. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து : ஈஸ்ட் பெங்கால் - கோவா அணிகள் இன்று மோதல்
கோவா அணி தாங்கள் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.