கால்பந்து

ஐ.எஸ்.எல் கால்பந்து : மோகன் பகான் அணியை வீழ்த்தியது மும்பை சிட்டி அணி + "||" + ISL Football : Mumbai City defeats ATK Mohun Bagan

ஐ.எஸ்.எல் கால்பந்து : மோகன் பகான் அணியை வீழ்த்தியது மும்பை சிட்டி அணி

ஐ.எஸ்.எல் கால்பந்து : மோகன் பகான் அணியை வீழ்த்தியது மும்பை சிட்டி அணி
மொத்தம் 6 கோல்கள் அடிக்கப்பட்ட இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.
கோவா ,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில்   ஏ.டி.கே மோகன் பகான் - மும்பை சிட்டி  அணிகள்  மோதின. இந்த போட்டியின் 4 வது நிமிடத்தில்  மும்பை சிட்டி  அணியின் விக்ரம் பிரதாப்  சிங்  முதல் கோல் அடித்தார்.
போட்டியின் 25 வது நிமிடத்தில் மீண்டும் விக்ரம் பிரதாப்  சிங் கோல் அடிக்க 2-0 என்ற கணக்கில் மும்பை சிட்டி  அணி முன்னிலை பெற்றது.

இதை தொடர்ந்து மும்பை அணி வீரர்கள் அடுத்தடுத்து கோல் மழை பொழிய மோகன் பகான் அணியால் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

இறுதியில் மும்பை அணி மொத்தம் 5 கோல்கள் அடிக்க   மோகன் பகான் அணியால் 1  கோல்கள் மட்டுமே அடிக்க முடிந்தது . மொத்தம் 6 கோல்கள்  அடிக்கப்பட்ட இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. 'விலைமதிப்பற்ற உலோகம்' - ரூ. 27 கோடி கொடுத்தால் ரூ. 22 ஆயிரம் கோடி..! பெண்ணை நூதனமாக ஏமாற்றிய கும்பல்..!
ரூ. 27 கோடி கொடுத்தால் ரூ. 22 ஆயிரம் கோடி தருவதாக கூறி பெண்ணை நூதனமாக கும்பல் ஒன்று ஏமாற்றி உள்ளது.
2. கொரோனா மின்னல் வேகம் எதிரொலி: மும்பையில் 144 தடை உத்தரவு
புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
3. மும்பையில் இன்று கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டக்கூடும்; ஆதித்ய தாக்கரே
மும்பையில் படிப்படியாக தொற்று பாதிப்பு அதிகரித்து தற்போது 1,000-ஐ தாண்டியிருப்பது மக்களுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.
4. மும்பையில் பாரில் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 17 ஆபாச நடன அழகிகள்
அந்தேரியில் உள்ள பாரில் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 17 நடன அழகிகளை போலீசார் மீட்டனர்.
5. மும்பை டெஸ்ட்; நியூசிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.