ஐ.எஸ்.எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூர் - ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூர் - ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 2 Dec 2021 9:50 AM GMT (Updated: 2 Dec 2021 9:50 AM GMT)

இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

 கோவா

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்நிலையில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில்  ஜாம்ஷெட்பூர்    -  ஹைதராபாத்  அணிகள்  மோதுகின்றன.

ஜாம்ஷெட்பூர் அணி விளையாடிய 2 போட்டியில் 1 -ல் வெற்றி 1-ல் டிரா என்று  புள்ளி பட்டியலில் 5- வது  இடத்தில் உள்ளது.  ஹைதராபாத் விளையாடிய 2 போட்டிகளில் 1-ல் வெற்றி,1-ல் தோல்வி என்று புள்ளி பட்டியலில்  7-வது இடத்தில்  உள்ளது.  

Next Story