ஐ.எஸ்.எல் கால்பந்து:ஜாம்ஷெட்பூர் -ஹைதராபாத் ஆட்டம் 'டிரா'


ஐ.எஸ்.எல் கால்பந்து:ஜாம்ஷெட்பூர் -ஹைதராபாத் ஆட்டம் டிரா
x
தினத்தந்தி 2 Dec 2021 4:39 PM GMT (Updated: 2 Dec 2021 4:42 PM GMT)

ஜாம்ஷெட்பூர் -ஹைதராபாத் அணிகள் மோதிய ஆட்டம் டிரா' வில் முடிந்தது.

 கோவா

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்நிலையில் இன்று  நடைபெற்ற   ஆட்டத்தில்  ஜாம்ஷெட்பூர் -ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என 'டிரா' வில் முடிந்தது.

41 -வது  நிமிடத்தில்  ஜாம்ஷெட்பூர் அணியின் கிரெக் ஸ்டெவார்ட் ஒரு கோல் அடித்தார் .இதனால்  ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்று முன்னிலை பெற்றது.

இதனை தொடர்ந்து ஹைதராபாத் அணியின் ஒக்பேச்சே 56- வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார் ,இதனால்  ஜாம்ஷெட்பூர் -ஹைதராபாத் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என 'டிரா' வில் முடிந்தது .


Next Story