கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்கால் ஆட்டம் ‘டிரா’ + "||" + ISL: Chennaiyin FC allow SC East Bengal to escape with a draw

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்கால் ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்கால் ஆட்டம் ‘டிரா’
சென்னை-பெங்கால் இடையேயான கால்பந்து போட்டி சமனில் முடிந்தது.
கோவா,

11 அணிகள் இடையிலான 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த சென்னையின் எப்.சி.- ஈஸ்ட் பெங்கால் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. பந்து சென்னை அணியினர் பக்கமே (54 சதவீதம்) அதிகமாக சுற்றி வந்தது. சென்னை அணியினர் இலக்கை நோக்கி அதிகமான ஷாட்டுகளையும் அடித்தனர். ஆனாலும் பெங்கால் அணியின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை. 

3-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 2 வெற்றி, ஒரு டிரா என்று 7 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத ஈஸ்ட் பெங்கால் அணி 2 டிரா, 2 தோல்வி என்று 2 புள்ளியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. இன்றைய ஆட்டங்களில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்- எப்.சி. கோவா (இரவு 7.30 மணி), பெங்களூரு-மும்பை சிட்டி (இரவு 9.30 மணி) அணிகள் மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு இன்று முதல் மருந்து தொகுப்பு
சென்னை மாநகராட்சி பகுதியில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு இன்று முதல் மருந்து தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. சென்னையில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரம்
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தரமாக நடைபெறுகிறதா? என்பதை மாநகராட்சி தலைமை என்ஜினீயர் என்.மகேஷன் நள்ளிரவில் அதிரடி ஆய்வு செய்தார்.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை-பெங்களூரு அணிகள் இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து லீக்கின் இன்றைய ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
4. சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை...!
ஆன்லைன் சூதாரட்டத்தால் ஏற்பட்ட கடன் தொல்லையால் சென்னையை சேர்ந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
5. சென்னையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் - ரூ.11.94 லட்சம் வசூல்
சென்னையில் நேற்று முக கவசம் அணியாத 5,917 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.