ஐ.எஸ்.எல். கால்பந்து: ஏ.டி.கே. மோகன் பகான் அணியை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஏ.டி.கே. மோகன் பகான் அணியை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்
x
தினத்தந்தி 6 Dec 2021 10:22 PM GMT (Updated: 6 Dec 2021 10:22 PM GMT)

நேற்றைய போட்டியில் ஏ.டி.கே. மோகன் பகான் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் வெற்றி பெற்றது.

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணியும் ஏ.டி.கே. மோகன் பகான் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி   2-1 என்ற கோல் கணக்கில் ஏ.டி.கே. மோகன் பகான் அணியை வீழ்த்தியது. 

4-வது ஆட்டத்தில் ஆடிய ஜாம்ஷெட்பூர் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். ஏ.டி.கே.மோகன் பகான் அணி 2-வது தோல்வியை சந்தித்தது. இன்றைய ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்-கோவா அணிகள் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன.


Next Story