கால்பந்து

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து : ஈஸ்ட் பெங்கால் - கோவா அணிகள் இன்று மோதல் + "||" + Indian Super League football: East Bengal-Goa clash today

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து : ஈஸ்ட் பெங்கால் - கோவா அணிகள் இன்று மோதல்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து : ஈஸ்ட் பெங்கால்  - கோவா  அணிகள் இன்று மோதல்
கோவா அணி தாங்கள் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
கோவா ,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்நிலையில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில்  ஈஸ்ட் பெங்கால்  - கோவா   அணிகள்  மோதுகின்றன.

ஈஸ்ட் பெங்கால் அணி விளையாடிய 4 போட்டியில்  2-ல் டிரா ,2 -ல் தோல்வி என்று  புள்ளி பட்டியலில் 10- வது  இடத்தில் உள்ளது. கோவா அணி தாங்கள்  விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி கண்டு புள்ளி பட்டியலில்  கடைசி இடத்தில்  உள்ளது.  

புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் ஈஸ்ட் பெங்கால்  - கோவா அணிகள் தங்களது முதல் வெற்றியை பெற முனைப்புடன் விளையாடும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல் கால்பந்து: கோவாவை வீழ்த்தியது ஈஸ்ட் பெங்கால்..!
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கோவா மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.
2. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: மோகன் பகான்- கோவா அணிகள் இன்று மோதல்
இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் மோகன் பகான்- கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
3. ஐ.எஸ்.எல் கால்பந்து: இரண்டாம் கட்ட ஆட்டங்களின் அட்டவணை வெளியீடு
கடைசி லீக் போட்டியில் எப்சி கோவா அணி கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் விளையாட உள்ளது.
4. கோவா மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது- பிரதமர் மோடி
நிர்வாகம், தனிநபர் வருமானம், தடுப்பூசி, உணவு பாதுகாப்பு, திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாநிலை ஆகியவற்றில் கோவா முன்னுதாரணமாக திகழ்கிறது என பிரதமர் மோடி பேசினார்.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து:ஈஸ்ட் பெங்காலுக்கு எதிரான போட்டியில் கோவா வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்தின் நேற்று நடந்த ஈஸ்ட் பெங்காலுக்கு எதிரான போட்டியில் கோவா வெற்றி பெற்றது.