ஐ.எஸ்.எல் கால்பந்து : ஹைதாராபாத் அணி வெற்றி


ஐ.எஸ்.எல் கால்பந்து : ஹைதாராபாத் அணி வெற்றி
x
தினத்தந்தி 8 Dec 2021 4:21 PM GMT (Updated: 8 Dec 2021 4:21 PM GMT)

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் -பெங்களூரு அணிகள் மோதின

கோவா

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்நிலையில் இன்று  நடைபெற்ற  ஆட்டத்தில்  ஹைதராபாத் -பெங்களூரு  அணிகள்  மோதின.

இந்த ஆட்டத்தில் 7 வது  நிமிடத்தில் ஹைதராபாத்  வீரர் ஒக்பேச்சே ஒரு கோல் அடித்தார் இதனால் ஹைதராபாத் அணி 1-0 என்று  முன்னிலை பெற்றது . பதிலடி கொடுக்க பெங்களுரு அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

இதனால் ஹைதராபாத் அணி 1-0 என்று வெற்றி பெற்றது.  


Next Story