ஐ.எஸ்.எல் கால்பந்து: ஐதராபாத் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல் கால்பந்து: ஐதராபாத் - நார்த் ஈஸ்ட் யுனைடெட்  அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 13 Dec 2021 8:51 AM GMT (Updated: 13 Dec 2021 8:51 AM GMT)

இன்று இரவு கோவாவில் நடைபெறும் ஆட்டத்தில் ஐதராபாத் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.

கோவா ,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்நிலையில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில்  ஐதராபாத்  - நார்த் ஈஸ்ட் யுனைடெட்  அணிகள்  மோதுகின்றன.

ஐதராபாத் அணி தாங்கள்  விளையாடிய 4 போட்டிகளிலும்  2-ல் வெற்றி   1-ல் டிரா ,1-ல் தோல்வி  என்று புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில்  உள்ளது. நார்த் ஈஸ்ட் யுனைடெட்  அணி விளையாடிய 5 போட்டியில்  1ல் வெற்றி 1-ல் டிரா ,3-ல் தோல்வி என்று  புள்ளி பட்டியலில் 9- வது  இடத்தில் உள்ளது. 

Next Story