ஐ.எஸ்.எல் கால்பந்து: மும்பை அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி..!


ஐ.எஸ்.எல் கால்பந்து: மும்பை அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி..!
x
தினத்தந்தி 19 Dec 2021 4:34 PM GMT (Updated: 19 Dec 2021 4:34 PM GMT)

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

கோவா ,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -கேரளா  அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கேரளா பிளாஸ்டர்ஸ் அணி சார்பில் சஹல் சமத் 27-வது நிமிடத்திலும் அல்வரோ 47-வது நிமிடத்திலும் ஜார்ஜ் பெரேயா 51-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதையடுத்து 3 கோல்களுடன் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை தோற்கடித்தது. 

Next Story