ஐ.எஸ்.எல் கால்பந்து : சென்னை - கேரளா அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல் கால்பந்து : சென்னை - கேரளா அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 22 Dec 2021 12:30 AM GMT (Updated: 22 Dec 2021 12:30 AM GMT)

இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை - கேரளா அணிகள் மோதுகின்றன

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை - கேரளா அணிகள் மோதுகின்றன 

சென்னை  அணி தாங்கள்  விளையாடிய 6 போட்டியில்   3 வெற்றி , 1 தோல்வி, 2 டிரா  என்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. கேரளா  6 போட்டியில்   2  வெற்றி , 1  தோல்வி, 3 டிரா  என்று 6-வது  இடத்தில் உள்ளது. 

Next Story