சர்வதேச கால்பந்து போட்டிகளின் நடுவர்களாக இந்தியாவை சேர்ந்த 18 பேர் தேர்வு


சர்வதேச கால்பந்து போட்டிகளின் நடுவர்களாக இந்தியாவை சேர்ந்த 18 பேர் தேர்வு
x
தினத்தந்தி 23 Dec 2021 3:26 PM GMT (Updated: 2021-12-23T20:56:43+05:30)

இந்தியாவிலிருந்து தேர்வானவர்களில் 4 பேர் பெண்கள் ஆவர்.

புதுடெல்லி,

ஒவ்வொரு ஆண்டும் கால்பந்து உறுப்பினர்களாக உள்ள நாடுகளில் இருந்து பெறப்படும் பட்டியலை பரிசீலனை செய்து பிபா அமைப்பு நடுவர்களை (ரெப்ரீ) ஓர் ஆண்டுக்கு தேர்வு செய்யும். அதன்படி அடுத்த ஆண்டுக்கான நடுவர்கள் பட்டியலை பிபா அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவிலிருந்து 18 பேர் தேர்வாகி உள்ளனர்.

அவர்கள் அனைவரும் உடற்தகுதி தேர்ச்சியில் வெற்றி பெற்ற பின் தான் நடுவர்களாக தேர்வு செய்யப்படுவர்.தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் பிபா அமைப்பின் பேட்ஜை அணிந்து கொள்ளலாம்.

இந்த தகவலை அனைத்திந்திய கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவிலிருந்து தேர்வானவர்களில் 4 பெண்கள்(2 நடுவர்கள் 2 உதவி நடுவர்கள்) மற்றும் 14 ஆண்கள்(6 நடுவர்கள் 8 உதவி நடுவர்கள்) ஆவர்.

ஆண் நடுவர்கள்: தேஜஸ் நாக்வெங்கர், ஸ்ரீகிருஷ்ணா கோயம்புத்தூர் ராமசாமி, ரோவன் ஆறுமுகன், கிறிஸ்டல் ஜாண், பிரஞ்சால் பானர்ஜி, வெங்கடேஷ் ராமச்சந்திரன்

பெண் நடுவர்கள்: ரஞ்சிதா தேவி தெக்சாம், கனிகா பர்மான்

Next Story