ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி 3-வது தோல்வி


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி 3-வது தோல்வி
x
தினத்தந்தி 30 Dec 2021 7:29 PM GMT (Updated: 2021-12-31T00:59:47+05:30)

2-4 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி.யிடம் தோல்வியை தழுவியது

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. 

இதில் நேற்றிரவு நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணியும், பெங்களூரு எப்.சி.யும் மோதின. இந்த ஆட்டம் ஒரு கட்டத்தில் 2-2 என்று சமநிலையில் இருந்த நிலையில் பெங்களூரு வீரர்கள் உதான்டா சிங் (70-வது நிமிடம்), பிரதிக் சவுத்ரி (74-வது நிமிடம்) அடுத்தடுத்து கோல் போட்டு ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினர். இதனால் இறுதியில்  2-4 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி.யிடம் தோல்வியை தழுவியது

தன்னுடைய 8-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 3-வது தோல்வியாகும். பெங்களூரு எப்.சி.க்கு 2-வது வெற்றியாகும். தொடரில் இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும்.


Next Story