கால்பந்து

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஏ.டி.கே. மோகன் பகான் - ஐதராபாத் எப்.சி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா..! + "||" + ISL Football: ATK Mohan Bagan - Hyderabad FC match draw ..!

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஏ.டி.கே. மோகன் பகான் - ஐதராபாத் எப்.சி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா..!

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஏ.டி.கே. மோகன் பகான் - ஐதராபாத் எப்.சி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா..!
ஏ.டி.கே. மோகன் பகான் மற்றும் ஐதராபாத் எப்.சி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.
கோவா,

11 அணிகள் இடையிலான 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் மற்றும் ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின. 

இந்த ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் அணியில் டேவிட் வில்லியம்ஸ் (1 வது நிமிடம்), ஆஷிஸ் ராய் (64 வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். இதே போல் ஐதராபாத் எப்.சி அணியில் பர்த்தொலோமேய் (18 வது நிமிடம்), ஜேவியர் சிவெரியோ (90+1 வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்த நிலையில் ஏ.டி.கே. மோகன் பகான்- ஐதராபாத் எப்.சி. அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில்  ஜாம்ஷெட்பூர்- நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல் கால்பந்து அரைஇறுதி: ஐதராபாத் எப்.சி அணி வெற்றி..!
ஐ.எஸ்.எல் கால்பந்து அரைஇறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி மற்றும் ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் மோதின.
2. ஐ.எஸ்.எல் கால்பந்து அரைஇறுதி: ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது கேரளா..!
ஐ.எஸ்.எல் கால்பந்து அரைஇறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.
3. ஐ.எஸ்.எல் கால்பந்து: கேரளா பிளாஸ்டர்ஸ் - கோவா ஆட்டம் 'டிரா'
கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் கோவா அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.
4. ஐ.எஸ்.எல் கால்பந்து: மும்பையை வீழ்த்தியது ஐதராபாத் அணி..!
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் மற்றும் மும்பை சிட்டி அணிகள் மோதின.
5. ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால்-பெங்களூரு அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் மற்றும் பெங்களூரு எப்.சி அணிகள் மோதுகின்றன.