ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர்- நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 Jan 2022 4:31 AM GMT (Updated: 6 Jan 2022 4:31 AM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து லீக்கின் இன்றைய ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில்இன்றைய ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணியும், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.

9 போட்டிகளில் விளையாடிய ஜாம்ஷெட்பூர் அணி 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 6-ஆம் இடத்தில் உள்ளது. நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 9 போட்டியில் விளையாடி 2 வெற்றியுடன் 10-ஆம் இடத்தில் உள்ளது.


Next Story