கொரோனாவில் இருந்து குணமடைந்தார் லயோனல் மெஸ்சி..!


கொரோனாவில் இருந்து குணமடைந்தார் லயோனல் மெஸ்சி..!
x
தினத்தந்தி 7 Jan 2022 12:25 AM GMT (Updated: 2022-01-07T05:55:43+05:30)

நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி கொரோனாவில் இருந்து குணமடைந்தார்.

பாரிஸ்,

பிரான்சில் உள்ள வன்னஸ் நகரில் பிரெஞ்சு கோப்பை கால்பந்து போட்டி தொடங்க இருந்த நிலையில், கடந்த 2-ந் தேதி அர்ஜென்டினா அணியின் லயோனல் மெஸ்சி உட்பட பிஎஸ்ஜி கிளப் அணியில் இடம்பெற்றிருந்த 4 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருந்த அர்ஜென்டினா கால்பந்து அணியின் கதாநாயகன் லயோனல் மெஸ்சி தற்போது குணமடைந்து விட்டார். 

அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் 'நெகட்டிவ்' முடிவு வந்துள்ளது. பி.எஸ்.ஜி. (பிரான்ஸ்) கிளப்புக்காக விளையாடி வரும் மெஸ்சி அடுத்த சில நாட்களில் தங்கள் அணியினருடன் இணைவார் என்று அந்த கிளப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story