ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால்-மும்பை சிட்டி அணிகள் இன்று மோதல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 Jan 2022 3:09 AM GMT (Updated: 7 Jan 2022 3:09 AM GMT)

ஐ.எஸ்.எல் கால்பந்து லீக்கின் இன்றைய ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்-மும்பை சிட்டி அணிகள் மோதல் சந்திக்கின்றன.

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில்  ஈஸ்ட் பெங்கால் அணியும், மும்பை சிட்டி அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.

9 போட்டிகளில் விளையாடிய ஈஸ்ட் பெங்கால் அணி 5 போட்டிகளை டிரா செய்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 9 போட்டிகளில் விளையாடிய மும்பை சிட்டி அணி 5 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.


Next Story