ஐ.எஸ்.எல் கால்பந்து : கேரளா அணி வெற்றி


ஐ.எஸ்.எல் கால்பந்து : கேரளா அணி வெற்றி
x
தினத்தந்தி 9 Jan 2022 4:10 PM GMT (Updated: 9 Jan 2022 4:10 PM GMT)

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா - ஹைதரபாத் அணிகள் மோதுகின்றன

கோவா 

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா - ஹைதரபாத் அணிகள் மோதின 

இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய 42  வது நிமிடத்தில்  கேரளா அணியின்  அல்வரோ  ஒரு கோல் அடித்தார் .இதனால் அந்த அணி 1-0  என முன்னிலை பெற்றது . பதிலடி கொடுக்க எதிரணி வீரர்களால்  கோல் அடிக்க முடியவில்லை .இதனால் 1-0 என கேரளா அணி வெற்றி பெற்றது 

Next Story