ஐ.எஸ்.எல் கால்பந்து: கோவாவை வீழ்த்தியது ஈஸ்ட் பெங்கால்..!


ஐ.எஸ்.எல் கால்பந்து: கோவாவை வீழ்த்தியது ஈஸ்ட் பெங்கால்..!
x
தினத்தந்தி 19 Jan 2022 4:27 PM GMT (Updated: 19 Jan 2022 4:27 PM GMT)

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கோவா மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டைப் போல் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறுகிறது.

இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் எப்.சி கோவா மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி எப்.சி கோவா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் கோவா அணி சார்பில் அல்பெர்ட்டோ ஆட்டத்தின் 37 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். மேலும் ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் நவோரெம் மகேஷ் சிங் ஆட்டத்தின் 9 வது நிமிடத்திலும் 42 வது நிமிடத்திலும் என 2 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழிசெய்தார்.

இந்த நிலையில் ஈஸ்ட் பெங்கால் அணி 2-1 என்ற கோல் கணக்கில் எப்.சி கோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Next Story