ஐ.எஸ்.எல். கால்பந்து: கொரோனாவால் இன்றைய ஆட்டம் தள்ளிவைப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Jan 2022 7:44 PM GMT (Updated: 2022-01-21T01:14:13+05:30)

ஜாம்ஷெட்பூர் அணியில் பல வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. 

இதில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்க இருந்த 67-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர்-மும்பை சிட்டி அணிகள் மோத இருந்தன. இந்த நிலையில் ஜாம்ஷெட்பூர் அணியில் பல வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அந்த அணியால் போதிய வீரர்களுடன் களம் இறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனை அடுத்து இன்றைய போட்டி தள்ளிவைக்கப்படுவதாக போட்டி அமைப்பு குழுவினர் நேற்று அறிவித்தனர்.


Next Story