ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னையின் எப்.சி அணி வெற்றி


ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னையின் எப்.சி அணி வெற்றி
x
தினத்தந்தி 22 Jan 2022 4:10 PM GMT (Updated: 2022-01-22T21:40:26+05:30)

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்.சி மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்.சி மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. 

இந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் சென்னை அணி சார்பில் ஏரியல் போரிசியுக் 52 வது நிமிடத்திலும் விளாடிமிர் கோமன் 58 வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சார்பில் லால்டன்மாவியா 35 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து சென்னையின் எப்.சி அணி 2-1 என்ற கோல் கணக்கில்  நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி தன்னுடைய 5 வது வெற்றியை பதிவு செய்தது.

Next Story