ஐ.எஸ்.எல் கால்பந்து: பெங்களூரு - கோவா ஆட்டம் டிரா


ஐ.எஸ்.எல் கால்பந்து: பெங்களூரு - கோவா ஆட்டம் டிரா
x
தினத்தந்தி 23 Jan 2022 4:03 PM GMT (Updated: 2022-01-23T21:33:39+05:30)

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி மற்றும் எப்.சி கோவா அணிகள் மோதின.

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி மற்றும் எப்.சி கோவா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி சார்பில் சுனில் சேத்ரி 61 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தனர். கோவா அணி சார்பில் டிலான் பாக்ஸ் 41 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இந்த நிலையில் பெங்களூரு எப்.சி மற்றும் எப்.சி கோவா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

Next Story