கால்பந்து

கொரோனா தடுப்பு வளையம் பாதுகாப்பாக இல்லை- ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மீது இந்திய பயிற்சியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு + "||" + Corona block ring not safe: Indian coach blames Asian Football Confederation

கொரோனா தடுப்பு வளையம் பாதுகாப்பாக இல்லை- ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மீது இந்திய பயிற்சியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

கொரோனா தடுப்பு வளையம் பாதுகாப்பாக இல்லை- ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மீது இந்திய பயிற்சியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பே காரணம் என்று பயிற்சியாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பை, 

ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் போது இந்திய வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் தவறான அணுகுமுறைகளே காரணம் என்று பயிற்சியாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

12 அணிகள் இடையிலான பெண்களுக்கான 20-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி மராட்டியத்தில் நடந்து வருகிறது. இதில் சீன தைபேவுக்கு எதிரான ஆட்டத்தில் மோதுவதற்கு முன்பாக இந்திய அணியில் 12 வீராங்கனைகள் கொரோனாவில் சிக்கினர். 2 வீராங்கனைகள் காயத்தால் அவதிப்பட்டனர். இதையடுத்து களம் இறங்க போதுமான வீராங்கனைகள் இல்லாததால் இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டதுடன் போட்டியில் இருந்தும் இந்திய அணி வெளியேற்றப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் தாமஸ் டெனர்பி நேற்று விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

நாங்கள் ஓட்டலுக்கு சென்ற பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில் அணியில் யாருக்கும் கொரோனா இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவே வந்தது. ஓட்டலில் இருந்து மைதானத்திற்கு பயிற்சிக்கு சென்று விட்டு திரும்பிய பிறகு அன்றைய தினம் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. அடுத்த நாள் ஓட்டல் ஊழியர்கள் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை தாண்டி எப்படி கொரோனா பரவியது என்பது தெரியாமல் புலம்பினோம்.

ஓட்டல் ஊழியர்களுக்கு ஜனவரி 17-ந்தேதி பரிசோதனை நடத்தப்பட்டு, மறுநாள் முடிவு வந்திருக்கிறது. ஆனால் ஜன. 19-ந்தேதி பிற்பகலில் தான் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு நாள் முழுவதும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.எப்.சி.) என்ன செய்து கொண்டிருந்தது என்பது எங்களுக்கு தெரியவில்லை. அணியினருக்கு போன்று மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படவில்லை. அவர்களுக்கு 6 நாட்களுக்கு ஒரு முறை தான் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இத்தனை நாட்கள் இடைவெளி ஏன் என்பதும் தெரியவில்லை.

இந்த விஷயத்தில் ஏ.எப்.சி. துரிதமான நடவடிக்கை எடுக்க தவறி விட்டது. போட்டி அமைப்பாளர்கள் ஓட்டல் நிர்வாகத்தினரை அழைத்து பேசி பாதிக்கப்பட்ட ஊழியர்களை உடனடியாக வெளியேறும்படி கேட்டு இருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் மேற்கொண்டு வீராங்கனைகளுடன் அவர்களுக்கு தொடர்பு இல்லாமல் போயிருக்கும். ஏனெனில் ஏ.எப்.சி. தாமதித்த அந்த ஒரு நாளில் பெரும்பாலான ஓட்டல் ஊழியர்கள் எங்களது தேவைகளை நிறைவேற்றுவது, அறையை சுத்தம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு கொண்டு தான் இருந்தனர்.

ஒன்று மட்டும் உறுதி. கொரோனா எங்கள் அணியில் இருந்து தொடங்கவில்லை. ஓட்டல் ஊழியர்கள் மூலம் தான் எங்கள் அணிக்குள் ஊடுருவியது. அதனால் இதில் எங்களது தவறு எதுவும் இல்லை. அது மட்டுமின்றி கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தை (பயோ பபுள்) உருவாக்கி அதை ஏ.எப்.சி. தான் கவனித்து வந்தது. இது முழுமையான பாதுகாப்பு இல்லாமல் போய் விட்டது. அதனால் அவர்கள் தான் இதில் சரியான தீர்வு கண்டிருக்க வேண்டும். அனேகமாக ஆட்டத்தை சில நாட்கள் தள்ளி வைத்திருக்கலாம். இந்த விவகாரத்தை ஏ.எப்.சி. கையாண்ட விதம் திருப்தி அளிக்கவில்லை. எங்களது கனவை (இந்த போட்டியின் மூலம் உலக கோப்பைக்கு தகுதி பெற இலக்கு) சிதைத்து விட்டார்கள்.

ஆனால் இ்ந்த பிரச்சினையில் அவர்கள் எங்கள் மீது குற்றம் சாட்ட முயற்சிப்பது தான் மிகுந்த வேதனை அளிக்கிறது. இவ்வாறு தாமஸ் டெனர்பி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கைக்கு இதுவரை இந்தியா 4 லட்சம் டன் டீசல் அனுப்பியது - தூதரகம் தகவல்
இலங்கைக்கு இதுவரை 4 லட்சம் டன் டீசல் அனுப்பியுள்ளதாக இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.
2. இந்தியா- நேபாளம் இடையேயான உறவு ஈடு இணையற்றது: பிரதமர் மோடி
நேபாளம் செல்லும் பிரதமா் மோடி அந்நாட்டு பிரதமர் ஷேர்பகதூர் தேவுபாவை சந்திக்க உள்ளாா்.
3. இலங்கைக்கு இந்தியா 65 ஆயிரம் டன் யூரியா அனுப்புகிறது
உரத்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் நிலையில் இலங்கைக்கு இந்தியா 65 ஆயிரம் டன் யூரியா அனுப்ப உள்ளது.
4. ஆசிய கோப்பை போட்டி: இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ரூபிந்தர் பால் சிங் விலகல்
ஆசிய கோப்பை போட்டியில் இருந்து இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ரூபிந்தர் பால் சிங் விலகியுள்ளார்.
5. ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியாவின் எந்த மூலையிலும் அடைக்கலம் அளிக்கக் கூடாது - சீமான் வலியுறுத்தல்
ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியாவின் எந்த மூலையிலும் அடைக்கலம் அளிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு சீமான் வலியுறுத்தி உள்ளார்.