2022 உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு போர்ச்சுக்கல் அணி தகுதி


Image Courtesy : AFP
x
Image Courtesy : AFP
தினத்தந்தி 30 March 2022 11:48 AM GMT (Updated: 30 March 2022 11:48 AM GMT)

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வருகிற நவம்பர், டிசம்பரில் நடைபெற இருக்கிறது


22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வருகிற நவம்பர், டிசம்பரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் போர்ச்சுக்கல் -நார்த் மசிடோனியா அணிகள் மோதின 

இந்த ஆட்டத்தில் 32வது நிமிடத்தில், 65 வது நிமிடத்தில்   போர்ச்சுக்கல் அணியின் பர்னோ பெர்னாண்டஸ் கோல் அடித்தார் .இதற்கு பதிலடி கொடுக்க எதிரணி வீரர்கள் போராடியும் கோல் அடிக்க முடியவில்லை .

இதனால்  2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற்றது .இந்த வெற்றியினால் கத்தாரில் வருகிற நவம்பர், டிசம்பரில் நடைபெறும்  உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு போர்ச்சுக்கல் தகுதி பெற்றது 

Next Story