பிரீமியர் லீக் கால்பந்து : ரொனால்டோ ஹாட்ரிக் கோல் - மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி


Image Courtesy : Manchester United Twitter
x
Image Courtesy : Manchester United Twitter
தினத்தந்தி 17 April 2022 6:32 PM GMT (Updated: 17 April 2022 6:32 PM GMT)

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் - நார்விச் சிட்டி அணிகள் மோதின


பிரீமியர்  லீக் கால்பந்து  நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் -  நார்விச்  சிட்டி அணிகள் மோதின .

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் மான்செஸ்டர் யுனைடெட் ஆதிக்கம் செலுத்தியது .அந்த அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்டத்தின் 7 வது நிமிடத்தில் ,32 வது நிமிடத்தில் ,76 வது நிமிடத்தில் என ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார் .

நார்விச் அணியில் கீரன் டோவெல் 45 வது நிமிடத்திலும் ,டீமு புக்கி 52 வது நிமிடத்த்தில் கோல் அடித்தனர் .2 கோல் அடித்த அந்த அணி கடைசி வரை போராடியும் 3 -வது கோல் அடிக்க முடியவில்லை .

இதனால் மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது .

Next Story