சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; பஞ்சாப் அணி அபார வெற்றி!


சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; பஞ்சாப் அணி அபார வெற்றி!
x
தினத்தந்தி 21 April 2022 10:02 AM GMT (Updated: 2022-04-21T15:32:03+05:30)

மற்றொரு ஆட்டத்தில் கேரளா - மேகாலாயா அணிகள் களம் கண்டன.

திருவனந்தபுரம்,

75-வது தேசிய அளவிலான சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள், கேரள மாநிலம் மலப்புரத்தில்  நடைபெற்று வருகிறது.

சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடரில், மலப்புரம் கொட்டப்பாடி மைதானத்தில்  நேற்று நடைபெற்ற குரூப்-ஏ பிரிவு ஆட்டத்தில், பஞ்சாப்-ராஜஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. 

இந்த  ஆட்டத்தில் பஞ்சாப் அணி, 4- 0 என்ற கோல் கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தியது. 

மற்றொரு  ஆட்டத்தில் கேரளா - மேகாலயா அணிகள் களம் கண்டன. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்ததால் போட்டி  சமனில் முடிந்தது. 


Next Story