இந்தியா-ஜாம்பியா இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி ரத்து


இந்தியா-ஜாம்பியா இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி ரத்து
x
தினத்தந்தி 13 May 2022 11:26 PM GMT (Updated: 2022-05-14T04:56:35+05:30)

அணியில் போதுமான வீரர்கள் தயாராக இல்லாததால் இந்த போட்டியில் விளையாட முடியாத நிலையில் இருப்பதாக ஜாம்பியா கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.

தோகா,

இந்தியா-ஜாம்பியா அணிகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் வருகிற 25-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. தரவரிசையில் 106-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி ஆசிய கோப்பை தகுதி சுற்று போட்டிக்கு தயாராகும் விதமாக 87-வது இடத்தில் உள்ள ஜாம்பியாவுடன் மோத இருந்தது. 

ஆனால் அணியில் போதுமான வீரர்கள் தயாராக இல்லாததால் இந்த போட்டியில் விளையாட முடியாத நிலையில் இருப்பதாக ஜாம்பியா கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த இந்தியா-ஜாம்பியா அணிகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

Next Story