பெரு அணியை வீழ்த்தி உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி


பெரு அணியை வீழ்த்தி உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி
x

Image Courtesy : Socceroos Twitter 

ஆஸ்திரேலியா பெருவை வீழ்த்தி தொடர்ந்து 5-வது முறையாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

தோகா,

32 அணிகள் இடையிலான 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் வருகிற நவம்பர் 21-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி இறுதிகட்ட தகுதி சுற்று தற்போது நடந்து வருகிறது. கத்தார் தலைநகர் தோகாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த தகுதி சுற்று 'பிளே-ஆப்' ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-பெரு அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த மோதலில் வழக்கமான 90 நிமிட ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களிலும் கோல் எதுவும் விழவில்லை.

இதனையடுத்து கடைபிடிக்கப்பட்ட 'பெனால்டி ஷூட்-அவுட்'டில் ஆஸ்திரேலியா 5-4 என்ற கணக்கில் பெருவை வீழ்த்தி தொடர்ந்து 5-வது முறையாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

31-வது அணியாக தகுதி பெற்ற ஆஸ்திரேலியா 'டி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. பிரான்ஸ், டென்மார்க், துனிசியா ஆகியவை அந்த பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளாகும்.


Next Story