பிஃபா 2022: முதல் முறையாக பெண் நடுவர்களை களம் இறக்க முடிவு


பிஃபா 2022:  முதல் முறையாக பெண் நடுவர்களை களம் இறக்க முடிவு
x

கத்தாரில் நடைபெற உள்ள கால்பந்து உலகக் கோப்பை தொடரில் பெண்களை நடுவர்களாக களம் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தோகா:

2022-ம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பை தொடரை வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கத்தார் நாட்டில் நடத்த உள்ளதாக சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (பிஃபா) அறிவித்தது.

இப்போட்டியில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கத்தார் நாட்டில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது.

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான இந்த தொடரில் முதல் முறையாக பெண் நடுவர்களை நியமித்துள்ளது பிஃபா. இது உலக அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த தொடரில் மூன்று பெண்கள் நடுவார்களாகவும், மூன்று பெண்கள் துணை நடுவர்களாகவும் பணியாற்ற உள்ளனர்.

பிரான்ஸ், ருவாண்டா மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண் நடுவர்கள் மூவர் இந்த பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணை நடுவர்களாக பிரேசில், மெக்சிகோ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த மூவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2020-ம் ஆண்டின் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் நடுவர் ஸ்டெபானி ஃப்ராப்பார்ட் நியமிக்கப்பட்டார். அவர் இப்போது தேர்வாகி உள்ள மூன்று பெண் நடுவர்களின் ஒருவர் ஆவார்.


Next Story