இந்திய கால்பந்து சரியான திசையில் நகர்கிறது: முன்னாள் பிரீமியர் லீக் மேலாளர் கருத்து


இந்திய கால்பந்து சரியான திசையில் நகர்கிறது: முன்னாள் பிரீமியர் லீக் மேலாளர் கருத்து
x

Image Courtesy : Indian Football Twitter

இந்திய கால்பந்து சரியான திசையில் நகர்கிறது என முன்னாள் பிரீமியர் லீக் மேலாளரும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் ஹைதராபாத் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் பில் பிரவுன் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஆசிய கோப்பைகால்பந்துபோட்டிக்கு இந்திய அணி தங்கள் கடைசி போட்டியில் ஹாங்காங் அணியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதி ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது. ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணி தொடர்ந்து 2-வது முறையாக தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில் இந்திய கால்பந்து சரியான திசையில் நகர்கிறது என முன்னாள் பிரீமியர் லீக் மேலாளரும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் ஹைதராபாத் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் பில் பிரவுன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் ;

இந்திய கால்பந்தாட்டத்திற்கு இது ஒரு அற்புதமான முன்னேற்றம். வெளிநாட்டுப் பயிற்சியாளர் இந்தியாவுக்கு வருவதால்,;வீரர்கள் பயிற்சி பெறுவது மட்டுமே நாங்கள் விரும்புகிறோம்.. வீரர்களுடன் நீங்கள் அதிக நேரம் தொடர்பு கொள்வதால், வீரர் மேம்படுவதற்கான சிறந்த வாய்ப்பு உள்ளது.,அதிக எண்ணிக்கையிலான போட்டிகள் இந்திய தேசிய அணிக்காக ஆட விரும்பும் பல இளைஞர்களுக்கு கதவுகளைத் திறக்கும்

போட்டிகளின் எண்ணிக்கை மற்றும் அணியில் உள்ள இந்திய வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து, காயம் மற்றும் சுழற்சியைக் கணக்கில் கொண்டு, அணியில் உள்ள ஒவ்வொரு இந்திய வீரரும் பயன்படுத்தப்படுவார்கள். அதுவே வளர்ச்சிக்கு உதவும். சில வீரர்கள் இடம்பெற மாட்டார்கள். சீசனின் தொடக்கத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், என்னைப் பொறுத்தவரை,.இந்திய கால்பந்து சரியான திசையில் நகர்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story