ஹாக்கி

இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் திடீர் நீக்கம் + "||" + Hockey India sacks men's national team coach Roelant Oltmans

இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் திடீர் நீக்கம்

இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் திடீர் நீக்கம்
இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சி யாளராக ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் டெல்லியில் ஹாக்கி இந்தியாவின் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளும் மூன்று நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் மீது பலரும் அதிருப்தி கருத்தை தெரிவித்தனர். 

அதனை தொடர்ந்து இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ரோலண்ட்க்கு பதிலாக புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படும் வரை ஹாக்கி உயர்மட்ட குழு இயக்குனர் டேவிட் ஜான் தற்காலிகமாக பதவி வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.