ஹாக்கி

உலக ஆக்கி லீக் இறுதி சுற்று: தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது, இந்தியா + "||" + World Circus League final round

உலக ஆக்கி லீக் இறுதி சுற்று: தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது, இந்தியா

உலக ஆக்கி லீக் இறுதி சுற்று: தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது, இந்தியா
உலக ஆண்கள் ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி புவனேஸ்வரத்தில் வருகிற டிசம்பர் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது.
புதுடெல்லி,

உலக ஆண்கள் ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி புவனேஸ்வரத்தில் வருகிற டிசம்பர் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான அட்டவணையை சர்வதேச ஆக்கி சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி போட்டியில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா, ஐரோப்பிய சாம்பியன் நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் உலக கோப்பை மற்றும் உலக லீக் சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இந்திய அணி தனது லீக் ஆட்டங்களில் டிசம்பர் 1-ந் தேதி ஆஸ்திரேலியாவையும், 2-ந் தேதி இங்கிலாந்தையும், 4-ந் தேதி ஜெர்மனியையும் எதிர்கொள்கிறது. இந்திய அணியின் எல்லா லீக் ஆட்டங்களும் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.