ஹாக்கி

நெதர்லாந்து கிளப் அணிக்கு எதிரான ஆக்கி இந்திய பெண்கள் அணி தோல்வி + "||" + Hocky Indian women's team failed

நெதர்லாந்து கிளப் அணிக்கு எதிரான ஆக்கி இந்திய பெண்கள் அணி தோல்வி

நெதர்லாந்து கிளப் அணிக்கு எதிரான ஆக்கி இந்திய பெண்கள் அணி தோல்வி
ஐரோப்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் ஆக்கி அணி, தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தை சேர்ந்த லேடிஸ் டென் போஸ்ச் கிளப் அணியுடன் நேற்று முன்தினம் மோதியது.
டென்போஸ்ச்,

இந்த கிளப்பில் தேசிய அணிக்காக விளையாடும் 9 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. 33-வது நிமிடத்தில் லேடிஸ் டென் போஸ்ச் அணி வீராங்கனை லிகே ஹூல்ஸ்கென் வெற்றிக்கான கோலை அடித்தார். இந்திய அணியின் வந்தனா கட்டாரியா, கேப்டன் ராணி ஆகியோர் கோல் அடிக்க எடுத்த முயற்சியை லேடிஸ் டென் போஸ்ச் கோல்கீப்பர் லாவகமாக செயல்பட்டு முறியடித்தார்.