ஹாக்கி

இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை ஆக்கி போட்டியில் இருந்து விலகுவோம் பாகிஸ்தான் மிரட்டல் + "||" + Pakistan demand visas threaten to withdraw from 2018 Hockey World Cup in India

இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை ஆக்கி போட்டியில் இருந்து விலகுவோம் பாகிஸ்தான் மிரட்டல்

இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை ஆக்கி போட்டியில் இருந்து விலகுவோம் பாகிஸ்தான் மிரட்டல்
இந்தியாவில் 2018-ல் நடைபெறும் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இருந்து விலகுவோம் என பாகிஸ்தான் மிரட்டல் விடுத்து உள்ளது.

துபாய்,

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் 14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி 2018 நவம்பர் 28 முதல் டிசம்பர் 16 வரையில் நடைபெறுகிறது. போட்டியில் 16 நாடுகளின் அணிகள் பங்கு கொள்கிறது. கிரிக்கெட் போட்டியை போன்று இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆக்கி போட்டிகளுக்கும் பெரும் ரசிகர்கள் உள்ளனர். எல்லை பயங்கரவாதம் காரணமாக பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது இல்லை என இந்திய தரப்பில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலமுறை அழைப்பு விடுத்தும் சாதமான பதில் கிடைக்கவில்லை. 

இந்தியா விளையாட்டு போட்டியில் அரசியலை கலக்குகிறது என பாகிஸ்தான் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இப்போதும் இருநாடுகள் இடையிலான அரசியல் சூழ்நிலையில் சர்வதேச ஆக்கி சம்மேளனம் நடத்தும் 2018 உலக கோப்பை ஆக்கி போட்டியில் பாகிஸ்தான் கலந்துக் கொள்வது என்பது ஆபத்தான நிலையிலே காணப்படுகிறது. புவனேஷ்வரில் ஆக்கி போட்டி நடைபெற இன்னும் ஒரு ஆண்டுகள் உள்ள நிலையில் பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனம் எங்களுடைய அணிக்கு சரியான நேரத்தில் விசா வழங்கப்பட வேண்டும், முழு பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என கூறிஉள்ளது. 

உலக கோப்பை ஆக்கி போட்டியில் பாகிஸ்தான் பங்கு பெறுவது என்பது தெளிவற்ற நிலையிலே உள்ளது. கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தான் ஆக்கி சம்மேளன செயலாளர் சாக்பாஸ் அகமது பேசுகையில், “அரசியல் சூழ்நிலை எப்படி விளையாட்டை பாதிக்கிறது என்பதை பார்க்க மிகவும் வேதனையாக உள்ளது. கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் காணப்படும் நிலைதான், ஆக்கியிலும் உள்ளது,” என கூறியிருந்தார். 

இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கி சம்மேளன தலைவர் காலித் கோகார், எளிதான விசா வழக்கும் முறை மற்றும் முழு பாதுகாப்பு தொடர்பான உறுதி இல்லாமல் பாகிஸ்தான் அணியை இந்தியாவிற்கு அனுப்ப மாட்டேன் என கூறிஉள்ளார். துபாயில் சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவர் நரேந்தர் பத்ராவிடம் பேசுகையில், இந்தியாவில் பாகிஸ்தான் அணிக்கு உயர்மட்ட பாதுகாப்பை கொடுக்கவேண்டும் என தெளிவுபடுத்தி உள்ளேன் என செய்தியாளர்களிடம் பேசிய காலித் கோகார் கூறிஉள்ளார்.

பத்ரா மற்றும் பிற சர்வதேச ஆக்கி சம்மேளன உறுப்பினர்கள் கலந்துக் கொண்ட கூட்டத்தில் ஆலோசனையானது மிகவும் சிறப்பாக இருந்தது. உலக கோப்பை ஆக்கி போட்டியில் கலந்துக் கொள்ளும் பாகிஸ்தான் அணிக்கு விசா பெறுதல் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் எந்தஒரு பிரச்சனையும் இருக்க கூடாது என சர்வதேச ஆக்கி சம்மேளனம் உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன் என கூறிஉள்ளார் காலித் கோகார்.