ஹாக்கி

ஆசிய கோப்பை ஆக்கி: ஜப்பானுடனான தொடக்க ஆட்டத்தில் 5-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி + "||" + India vs Japan in Hockey Asia Cup, Live Score: India race to 5-1 lead

ஆசிய கோப்பை ஆக்கி: ஜப்பானுடனான தொடக்க ஆட்டத்தில் 5-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி

ஆசிய கோப்பை ஆக்கி: ஜப்பானுடனான தொடக்க ஆட்டத்தில் 5-1 என்ற கணக்கில் இந்தியா  வெற்றி
ஆசிய கோப்பை ஆக்கி: ஜப்பானுடனான தொடக்க ஆட்டத்தில் 5-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றிபெற்றது.
ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் இன்று (புதன்கிழமை) முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது.  இதில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, மலேசியா, சீனா, ஓமன் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

தொடக்க நாளான இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான்  அணிகள் மோதின. இதில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோல்வியுறச் செய்தது. அடுத்த லீக் ஆட்டங்களில் இந்திய அணி 13-ந் தேதி வங்காள தேசத்தையும், 15-ந் தேதி பாகிஸ்தானையும் சந்திக்கிறது.

இன்று நடைபெறும் மற்றொரு  லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.