ஹாக்கி

உலக ஆக்கி லீக்: இந்தியா-பெல்ஜியம் இன்று மோதல் + "||" + World Hockey League: India-Belgium clashes today

உலக ஆக்கி லீக்: இந்தியா-பெல்ஜியம் இன்று மோதல்

உலக ஆக்கி லீக்:
இந்தியா-பெல்ஜியம் இன்று மோதல்
முன்னணி 8 அணிகள் இடையிலான உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.
புவனேஸ்வரம்,

முன்னணி 8 அணிகள் இடையிலான உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் ஏ பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டங்களில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவையும், பெல்ஜியம் 3-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தையும் தோற்கடித்தது. இந்த போட்டியில் லீக் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில் கலந்து கொண்ட அனைத்து அணிகளும் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.

ஏ பிரிவில் முதலிடத்தை பிடித்த பலம் வாய்ந்த பெல்ஜியம் அணி, ‘பி’ பிரிவில் ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியாவை இன்று இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது. ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற அணியான பெல்ஜியத்துக்கு எதிராக இதுவரை 72 ஆட்டங்களில் மோதியுள்ள இந்திய அணி அதில் 45-ல் வெற்றியும், 17-ல் தோல்வியும், 10-ல் டிராவும் கண்டுள்ளது.

முன்னதாக மாலை 5.15 மணிக்கு நடக்கும் மற்றொரு கால்இறுதியில் ஸ்பெயின் அணி, ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. நாளை நடைபெறும் மற்ற கால்இறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து-அர்ஜென்டினா, ஜெர்மனி-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.